நேற்றைய தினம் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஏராளமான கவர்ச்சி திட்டங்களை அறித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்புகளை ‘மளிகை கடை’ அறிவிப்புகள் என தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

‘‘பதற்றபாடி’’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலை தளப்பக்கத்தில்,

‘‘ எல்லைக்கே வந்து சேர மாட்டோம் என தோல்வி பயம் கொண்ட ஒருவனே முந்திக் கொண்டு ஓடுவான் என்பது போல்…

“பருப்பு எண்ணை இலவசம் ஃபிரிட்ஜ் இலவசம்” போன்ற மக்களை மலிவாக எண்ணும் எடப்பாடியின் மளிகைக் கடை அறிவிப்புகளும்…

“இதையாவது ஜெயிக்க முடியுமா என்பதாக தங்களை மட்டுமே முன்னிறுத்தும்முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே கொண்ட 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும்

எடப்பாடியின் பதற்றத்தையும் படுதோல்விக்கு காத்திருக்கும் அதிமுகவின் பரிதாப நிலையையுமே காட்டுகிறது..!’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal