பாமக சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் விளையாடுவதாக விமர்சித்த உச்சநீதிமன்றம், சின்னம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. கட்சி யாருக்கு என்பதில் முடிவு தெரியும் வரை சின்னத்தை முடக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் கோரப்பட்டது.

அதேநேரம், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தால் தலையிட முடியாது எனவும், ஏற்கனவே ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் அன்புமணி தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு, பாமக சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் விளையாடுவதாக விமர்சித்தது.

மேலும் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது யார் எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், உள்கட்சி விவகாரத்தில் தலையிட தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சின்ன விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை மனு தாக்கல் செய்யவும் ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், சிவில் நீதிமன்றம் மூன்று நாட்களில் மனுவை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal