சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் மீண்டும் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் களமிறங்க உள்ளார். ஏற்கனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் ராயபுரம் தொகுதியை ‘ராயல்’புரமாக மாற்றி வைத்திருக்கும் ஐட்ரீம் மூர்த்தியை வீழ்த்தி ஜெயக்குமார் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.வில் அதிகரித்திருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு, விரைவில் வேட்பாளர்களை திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அறிவிக்க உள்ளன. சென்னை தலைநகரில் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றன ராயபுரத்தில் மீண்டும் அதிமுக சீனியர் ஜெயக்குமார் களமிறங்க உள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் ஜெயக்குமார் 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இருந்த போதிலும் ராயபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில் ஜெயக்குமார் உறுதியாக உள்ளார். ஆனால், இந்த முறையும் ஐட்ரீம் மூர்த்தியை ஜெயக்குமாரால் அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது என்பதுதான் கள நிலவரமாக உள்ளது.

காரணம், ஐட்ரீம் மூர்த்தி ராயபுரம் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 5 ஆண்டில் பகுதிவாழ் மக்களின் 50 ஆண்டுகால கனவான போஜராஜன் நகர் சுரங்கப்பாதை முதல், 45 கோடியில் அதிநவீன தொழிலாளர் பயிற்சி மையம், மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பிரத்யேக தங்கும் விடுதி, தொகுதி முழுவதும் 25 கோடிக்கும் அதிகமான மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்! ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிலும் மாணவர்களுக்கு கனவுகளை நனவாக்க இலவசப் பயிற்சி! முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் வசதி.

சுகாதாரப் புரட்சியில் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை சுமார் ரூ.120 கோடி மதிப்பில், 38 புதிய பிரிவுகள், 300 புதிய படுக்கைகள், 40 வகை பரிசோதனைகள் என தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 152 கோடியில் பிரம்மாண்ட ளிக்ஷீtலீஷீ பிரிவு மற்றும் புதிய மருத்துவமனைகள். சுமார் 500 கோடி மதிப்பீட்டில் 3000-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள்! 3000 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கியதுடன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மின்சார மேம்பாடு என ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குளிரூட்டும் வசதிகொண்ட புதிய திருமண மாளிகை, பூங்காக்கள், உடற்பயிற்சிகூடம் என பலதிட்டங்களை நிறைவேற்றி கொடுத்து இருப்பதாக அத்தொகுதி மக்களே தெரிவிக்கின்றனர்.

ஆகமொத்தத்தில் ராயபுரம் தொகுதியை ‘ராயல்’ புரமாக மாற்றி வருகிறார் ஐட்ரீம் மூர்த்தி..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal