மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்களில் அறிவு சார்ந்த… அரசியல் சார்ந்த… கருத்தியல் ரீதியான குட்டிக் கதைகளை சொல்வார். அந்தக் கதைகளுக்கு அப்போதைய சொந்தக் காரர் மருது அழகுராஜ்தான்!
தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணைத் தலைவராக இருக்கும் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் சிந்திக்க வைக்கக்கூடிய வகையிலும், எதிர்கால சிந்தனையுடனும் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறார். பொதுவாக கவிஞர்களின் கருத்துக்கள்தான் எதிர்காலங்களிலும் பலித்து வருகிறது.

அந்த வகையில், ‘‘ரீலும் – ரியலும்’’ என்ற தலைப்பில்
பெரியாரும் அண்ணாவும் கட்டமைத்த
திராவிட பூகோளத்தில்….
கலைஞர் எனும் அறிவாலய பல்கலைக்
கழகத்தில்….
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் ததும்பாத தன்னிகரில்லா தலைமையால்….
பட்டை தீட்டப்பட்ட பவள விழா வைரம் தான் உதயநிதி ஸ்டாலின் என்றால்….
முதிர்ச்சியும் பயிற்சியும் இல்லாது அவசரத்தில் வெளிப்பட்டு ஆட்டம் போடுகிற…
நிலக்கரித் துண்டு தான் விஜய்…
இது ரியலுக்கும் ரீலுக்குமான வேறுபாடு…!’’ என்று பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்!
வருகிற 2026 தேர்தலோடு அ.தி.மு.க. இருக்கும் அரிச்சுவடு இல்லாமல் போய்விடும். இதைத்தான் நேற்று ஓ.பி.எஸ். ‘அ.தி.மு.க. என்ற கட்சி இருக்கிறதா?’ என கேட்டார். இந்த நிலையில்தான் எதிர்கால அரசியல் களத்தில் ‘பட்டை தீட்டப்பட்ட வைரம்தான் உதயநிதி…!
முதிர்ச்சியும் பயிற்சியும் இல்லாது அவசரத்தில் வெளிப்பட்டு ஆட்டம் போடுகிற நிலக்கரித்துண்டுதான் விஜய்..!’ என மருது அழகுராஜ் பதிவிட்டிருக்கிறார்.

மருது அழகுராஜின் பதிவிற்கு சாட்சிதான், 41 பேர் பலியான சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றுவிட்டு, வெற்றி விழாவில் பங்கேற்று வந்தது போன்று காரின் மேல் நின்று விஜய் கையசைத்து வந்த காட்சி..!
