திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பெண் நிர்வாகியை நியமித்து அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாணவரணி துணைச் செயலாளராக இருந்த வீரமணி ஜெயக்குமார் என்பவரை மாணவரணி செயலாளராக நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க.வில் இப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ்காந்தி கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
