இன்னும் 3 முதல் 5 நாட்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தத் திட்டம்; மேற்கு வங்கம் மாநிலத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. அடுத்தவாரம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக வாய்ப்பு உள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே முதல்வாரத்தில் நடைபெற வாய்ப்பு என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
