தி.மு.க.விலிருந்து பிரிந்து அக்கட்சிக்கு எதிராக அ.தி.மு.க. என்ற இயக்கத்தை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.! அந்த இயக்கத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவரை தி.மு.க.வில் இணைந்து ‘இன்ப அதிர்ச்சி’யைக் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்.

அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.விற்கு செல்வதும், தி.மு.க.விலிருந்து சொல்லிக்கொள்ளும் படியான முக்கிய நிர்வாகிகள் விலகாமல் இருப்பதற்குமான காரணங்களை மிகவும் அழகாக, ‘எதிரியையும் நண்பராக மாற்றக்கூடிய ஆளுமை எங்கள் முதல்வருக்கு உண்டு’ என்ற வகையில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி ஆருணா தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதுதான் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப்பக்கத்தில்,

‘‘சென்ற வாரம் விமானத்தில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த தொழில் அதிபர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். என்னிடம் அவர், எங்கள் சமுதாய சங்க கூட்டங்களுக்கு பங்கேற்போரை தங்கள் அரசியல் அடையாளத்தை வெளிப்படும் கரை வேட்டிகள் உடுத்த வேண்டாம் என வேண்டுகோள் வைப்போம். எங்கள் சங்கத்தலைவர் ‘பாருய்யா நான் சங்க உறுப்பினர்களை அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் பல முறை கூறியும் இந்த கருப்பு சிவப்பு வேட்டி கட்டிக்கொண்டு திமுகாரன் வருவர். இந்த திமுகாரனை மட்டும் திருத்தவே முடியாது’ என அவர் சொன்ன போது அந்த வினாடி நான் அடைந்த பெருமிதத்தை விவரிக்க இயலாது.

என்னிடம் ஏன் அப்படி என கேட்டார்? ‘‘சார் நாங்க உண்மையிலேயே ஒரே குடும்ப உணர்வை பெற்றவர்கள். மறைந்த டாக்டர் பிறந்த நாள் முதல் இன்றைய எங்கள் கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் பிறந்த நாள் அன்று சித்தரஞ்சன் சாலை, கோபாலாபுரம், C.I.T. COLONY காலனி என அனைத்து இல்ல கதவுகளும் கழகத்தோழர்களை வரவேற்க காத்திருக்கும். கழகத்தினர் மாண்புமிகு முதல்வரை அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்திய பிறகு எங்கள் துர்கா அண்ணி, செல்வி அண்ணி, துணை பொதுச்செயலாளர் சகோதிரி கனிமொழியையும் மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள். அவர்களும் எத்தனை நபர் வந்தாலும் சலிக்காமல் இன்முகத்துடன் வரவேற்பர் என கூறிய போது அவர் வியந்து மகிழ்ந்து பாராட்டினார்.

இங்கு இணைக்கப்பட்டது கழகத்தலைவரின் எங்கள் அனைவருக்கும் அண்மையில் அனுப்பிய கடிதம், இத்தகைய அணுகுமுறைதான் எங்களை அன்பும் நெறியும் பெற்ற உறுதி படைத்த கொள்கை பற்றாளர்களாக இந்த கழகத்தில் அலுக்காமல் அசராமல் பயணிக்கும் காரணமாகும். எனவேதான் மாற்றுக்கட்சியினர் அதிகளவில் எங்கள் கழகத்தில் இணைகின்றனர். ஒரு மனிதனை வென்றிட பொறுமை, அன்பைவிட சிறந்த பண்பான ஆயுதம் இந்த உலகத்தில் இல்லை.

இன்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் , நமது முதல்வர், என் தந்தை சிலைத்திறப்பு விழாவில் “மன்னிப்போம் மனப்பகையை துறப்போம்” என முத்தமிறிஞரின் அந்த ஒற்றைவரியை நான் கடைப்பிடித்து வருகிறேன் என்பதே உண்மை!
வெல்க திமுக! வளர்க தமிழகம்!’’ என பதிவிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் இந்தப் பதிவை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal