பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திருச்சியில் சந்தித்தனர். திருச்சியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக குடும்பம் ஊழல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் உதயநிதியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக ஆட்சியில் 50,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டிய காலம் இது. ஸ்டாலின் உதயநிதியை பதவியில் இருந்து அகற்றி, அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானவுடன் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

சட்டம் ஒழுங்கு சீராகிவிடும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். இளைஞர்களுக்கு அதிகளவு வாய்ப்புகள் கொடுக்கப்படும். அம்மாவின் வழங்கிய நல்லாட்சியை எங்கள் ஆட்சி வழங்கும். தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி பலமாக பாதுகாப்பாக உள்ளது.

திமுக தான் கூட்டணியை பற்றி பயப்பட வேண்டும். திமுகவை காங்கிரஸ் பிளாக்மெயில் செய்தது போல எங்கள் கூட்டணியில் யாரும் பிளாக் மெயில் செய்வதில்லை. எங்கள் கூட்டணி குடும்பம் போன்றது. விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். இந்த தேர்தல் திமுகவுக்கு எதிரான போர்’’ என்றார்.

‘விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா?’ என்கிற கேள்விக்கு பியூஷ் கோயல் மறுப்பு தெரிவிக்காமல் சென்றார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விஜய் உள்ளிட்ட அனைவரும் கூட்டணியில் இணைவார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய்யுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal