‘‘மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடியின் வருகை திமுக இல்லாத தமிழகத்திற்கு முன்னுரை எழுதும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் ஆவேசமாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் மோடியின் மதுரை வருகை, தமிழகத்தில் உள்ள ஊழல் அமைச்சர்களின் அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் முரட்டு அடிமையாக செயல்பட்டு, தமிழகத்தை ரூபாய் 10.50 கோடி கடனில் தள்ளிய ஊழல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து பயந்து பயங்கரவாதிகள் நாடாக தமிழகத்தை மாற்றிய முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பும்.

தமிழக மக்களுக்கு தேர்தலின் போது கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து தமிழக மக்கள் வீழ்த்துவார்கள். பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1, 2026 அன்று மதுரைக்கு வருகை தந்து எய்ம்ஸ் மருத்துவமனை புதிய கட்டிடத்தை எம் திறந்து வைக்கிறார். தொடர்ந்து மண்டேலா நகர் பகுதியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் உலகம் பார்த்திராத ஊழல் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஊடல் அமைச்சரின் நேருவை முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்கிறார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அறநிலை துறையின் கோவில் கும்பாபிஷேகங்களிலும் திமுக அரசு ஊழல் முத்திரை பதித்து விட்டது. இந்து கடவுள்களின் ஆலயத்தில் இருந்து அறநிலைத்துறை பெயரால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விஞ்ஞான ரீதியில் ஊழல் நடந்துள்ளது.
4332 கோவில்களில் மக்கள் பணத்தில், இந்து சமுதாய மக்கள் அளித்த ஆன்மீக நன்கொடையில் கும்பாபிஷேகம் நடத்திய அரசு, வெட்கப்படாமல் ஊழலும் செய்துவிட்டு பெருமையும் பட்டுக் கொள்கிறது. பெரியார் என்கிற ராமசாமி கடவுளை திட்டுவார். ஆனால் திமுக முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர் பாபுவும், திமுக அறங்காவலர்களும் கடவுளையே ஏமாற்றி உள்ளனர். தெய்வம் நின்று கொள்ளும் என்பதை விரைவில் உணர்வார்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில், புனித கார்த்திகை தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்து மகா பாதக செயலை செய்த திமுக அரசு தமிழகத்தில் ஆளும் தகுதியை இழந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வீட்டில் முருகனுக்கு தினமும் விளக்கு ஏற்றி வைத்து, இந்த விடியாத இருண்ட திமுக அரசை முருகனே தண்டித்து வீட்டுக்கு அனுப்பு என்று ஒவ்வொரு நாளும் வழிபட்டு வருகின்றனர். டாஸ்மார்க் கொள்ளையால் பெண்களின் தாலியறுத்த திமுகவிற்கு இனி தமிழக பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
தேர்தல் தோல்வி பயத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கு பொங்கல் பரிசாக கொடுக்காமல் ஏமாற்றிய எட்டாயிரம் ரூபாயில் 5000 ரூபாய் மட்டும் பாஜக சுட்டிக்காட்டியதால் தட்டி கேட்டதால் மக்களிடம் அளித்தனர்.
5000 ரூபாய் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கலாம் என்ற திமுகவின் திட்டத்தை தமிழக பெண்கள் மத்தியில் முறியடிப்பார்கள். ஓட்டுக்கு ஒரு லட்சம் வீட்டுக்கு 5 லட்சம் கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டோம் என்று, தமிழகப் பெண்கள் உறுதியுடன் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கடவுளின் முன் சத்தியம் செய்து விட்டார்கள்.
பிரதமர் மோடி- எடப்பாடி பழனிச்சாமி இருவரின் டபுள் இன்ஜின் ஆட்சி திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்கும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் வீழ்ச்சி பயணத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களை முன்னேற்ற பாதைக்கு, ஒவ்வொரு குடும்பத்தின் குழந்தைகளை மாணவர்கள் இளைஞர்களை எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக வெற்றிகரமான குடிமக்களாக மாற்றும்.
ஏராளமான இலவசங்களை தந்து மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரலாம் என்று திமுக கனவு காண்கிறது. எத்தனை கூட்டணி சேர்த்தாலும் நாடகங்கள் நடத்தினாலும் திமுக மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என்பதை வருகின்ற சட்டமன்றத் தேர்தல் உணர்த்தும்’’ என்று கூறியிருக்கிறார்.
ஆகமொத்தத்தில் பிரதமர் மோடியின் வருகை தி.மு.க.விற்கு 2026ல் முடிவுரை எழுதுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
