பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை முரசு சின்னம் ஒதுக்கப்படாததால் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியில் உள்ளார். இதனால் அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுமா இல்லை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு விஜயகாந்த், தேமுதிக எனும் கட்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து களமிறங்கியது. அப்போது விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். 2006 சட்டமன்றத் தேர்தல் (தனித்து போட்டி, 234 தொகுதிகள்): 8.38% வாக்குகள். வெற்றி: 1 இடம் (விருத்தாசலம் – விஜயகாந்த்). இது தேமுதிகவின் உச்சகட்டம்; மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்தது.

2011 சட்டமன்றத் தேர்தல் (அதிமுக கூட்டணி, 41 தொகுதிகள்): 7.88% வாக்குகள். வெற்றி: 29 இடங்கள். எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பதவி வகித்தார். 2016 சட்டமன்றத் தேர்தல் (மக்கள் முன்னணி கூட்டணி, 104 தொகுதிகள்): 2.39% வாக்குகள். வெற்றி: 0 இடங்கள். பெரும் சரிவு ஏற்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தல் (அதிமுக கூட்டணி, 60 தொகுதிகள்): 0.43% வாக்குகள். வெற்றி: 0 இடங்கள். வாக்கு வங்கி மிகவும் குறைந்தது.

இந்த நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. முரசு சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில் மக்கள் நீதி மய்யம், தவெக ஆகிய கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படாததால் தனி சின்னத்தில் போட்டியிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக ஒப்புக் கொள்ளாது. எனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து தேமுதிகவினதோ, ‘‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவா நாங்கள் கட்சி நடத்தி கொண்டிருக்கிறோம்? தனி சின்னத்தில் போட்டியிட்டு எங்கள் பலத்தை காட்டுவோம். அப்படி போட்டியிட்டால்தான் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.

நேற்றுதான் மாம்பழம் சின்னத்தை முடக்கவேண்டும் என வழக்கு போட்ட ராமதாஸின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்தான் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal