‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்!’ என தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நடத்தி வரும் நிலையில், முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளை பொருநை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!
தி.மு.க. மாநில சுற்றுச் சூழல் அணி மற்றும் ஆலங்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பொருநை அருங்காட்சியத்துக்கு அழைத்துச் சென்றார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!

பின்னர், பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மாணவ, மாணவிகள் முன்னிலையில் முதலமைச்சருக்கு கேக் வெட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆவுடையப்படன் கலந்துகொண்டு கேக் வெட்டி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டினார்.
இந்நிகழ்ச்சி குறித்து முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கூறும்போது, ‘‘இந்த மாதம் முழுவதும் (பிப்ரவரி) வாரத்திற்கு மூன்று முறை திருநெல்வேலி மேற்கு மாவட்டத்திற்குற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை அருங்காட்சியகத்துக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

இளம் வயதில் படிக்கும் மாணவர்கள் தமிழின் பெருமையையும், அருமையையும் புரிந்துகொள்ளவேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலினும், ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாட்டை வழி நடத்தி வருகிறார். எனவே, தமிழின் தொன்மையை மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொடடி, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா எடுத்திருக்கும் புதிய முயற்சியை உடன்பிறப்புகள் வரவேற்று வாழ்த்தி வருகின்றனர்.
