ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன், டிஜிபி அலுவலகத்தில் இயங்கி வரும் சட்டம் – ஒழுங்கு உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மேற்கு துணை ஆணையர் மதன், தூத்துக்குடி எஸ்.பி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திருநெல்வேலி தலைமையிட துணை ஆணையர் விஜயகுமார், திருநெல்வேலி மேற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக தலைமையிடத்தையும் கவனித்துக் கொள்வார்.
