ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ‘மதுரை சரவணா கிச்சன்’ சார்பில் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை பிரியாணி விற்பனை துவக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் பா.சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் ஆகியவை இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கி கடந்த ஜனவரி 19 முதல் காலை உணவாக 10 ரூபாய்க்கு தேநீருடன் 3 இட்லி வழங்கி வந்த நிலையில், மாலை வேளையிலும் மக்களுக்கு மலிவு விலை உணவு வழங்கும் சேவையை சரவணா கிச்சன் விரிவுபடுத்தி உள்ளது.

கடந்த 12ம் தேதி வியாழக்கிழமை சரவணா மருத்துவமனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலிவு விலையில் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை பிரியாணி விற்பனையை டெம்பிள்சிட்டி நிறுவனர் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட நடிகர்கள் சிஸர் மனோகர், கிங்காங், விஜயகனேஷ், சாரப்பாம்பு சுப்புராஜ், பாவா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆர்.கே.ரமேஷ், வழக்கறிஞர் குமாரதேசிகன், முனிச்சாலை சரவணன், எம்.எஸ்.கே மல்லன், சந்திரசேகர் கணேசன், ராமசுப்பு, செழியன், அஜீத் குமார், முத்து உள்பட அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

மனம் கமகமக்க மலிவு விலையில் சிக்கன் பிரியானி வழங்கும் திட்டம் மதுரை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal