பாமக​வும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​பு மணி கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் நிலை​யில், அய்யா பாமக என்ற புதிய கட்சி ராம​தாஸ் தரப்​பால் தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

பாமக​வில் ராம​தாஸ், அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. தந்​தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்​சினை​யால் கட்​சி​யினர் இரு பிரி​வு​களாக செயல்​பட்டு வரு​கின்​ற​னர். கட்​சி​யில் பெரும்​பாலானோர் அன்​புமணி ஆதர​வாக இருப்​ப​தால், கட்​சி​யில் அன்​புமணி கை ஓங்கி உள்​ளது. இதனை பயன்​படுத்தி முன்​கூட்​டியே அதி​முக கூட்​ட​ணி​யில் அன்​புமணி இணைந்​தார். கட்​சி​யும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​புமணி கட்​டுப்​பாட்டி இருப்​ப​தால், அடுத்த கட்ட நடவடிக்​கை​களில் ராம​தாஸ் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கி​றார்.

இதற்​கிடை​யில், ராம​தாஸ் அணி​யில் கட்​சி​யின் தலைமை நிலைய செய​லா​ள​ராக இருக்​கும் அன்​பழ​க​னின் மகன் முகிலன் தலை​மை​யில் “அய்யா பாட்​டாளி மக்​கள் கட்​சி” என்ற புதிய கட்சி உரு​வாகி​யுள்​ளது. பாமக​வின் பெயர், வண்​ணம், கொடி ஆகிய​வற்றை பிர​திபலிக்க கூடிய வகை​யில், ஏற்​கெனவே இருக்​கும் பாமக கொடி​யில் ராம​தாஸின் முகத்தை மட்​டும் பதித்து புதி​தாக கொடி​யும் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. தேர்​தலில் பாமக சார்​பில் அன்​புமணி நிறுத்​தும் வேட்​பாளர்​களுக்கு எதி​ராக, வேட்​பாளர்​களை நிறுத்​து​வதற்​காக அய்யா பாமக என்ற புதிய கட்சி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அன்புமணிக்கு ‘மேலிட’ ஆதவு இருப்பதால் மாம்பழம் சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துகொண்டு, புதிய கட்சியை டாக்டர் ராமதாஸ் உருவாக்கி, அதன்மூலம் அன்புமணிக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை களத்தில் இறக்க இருக்கிறாராம். இதனால், எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியிலும், தி.மு.க. தரப்பு உற்சாகத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal