கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கணவனைக் கொலை செய்வது, கணவன் மனைவியை கொலை செய்வது என நாளுக்கு நாள் கொடூர சம்பவம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தாலிய கட்டிய கணவனை கள்ளக்காதலுன் சேர்ந்த கொலை செய்துவிட்டு, கேஷுவலாக ஆசிரியை பள்ளிக்கு சென்ற சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது.

தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அச்சம்பேட் நகரில் மாருதி காலனியை சேர்ந்தவர் லக்ஷ்மன்நாயக்.. இவருக்கு 38 வயதாகிறது. இவரது மனைவி பெயர் பத்மா. இவருக்கு 30 வயதாகிறது.

பத்மா அருகில் உள்ள பட்டுகாடிப்பள்ளிதாண்டா தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே பத்மாவுக்கும், தடூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் கோபி (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோபியும் ஏற்கனவே திருமணமானவர். முதலில் நட்பாக இருந்த இந்த பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் லக்ஷ்மன்நாயக்குக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.. உடனே மனைவியை கண்டித்தார். ‘‘இந்த பழக்கத்தை உடனே நிறுத்து’’ என்று சொல்லியும், பத்மா கேட்கவில்லை. இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இந்த சண்டைகளால் வெறுப்படைந்த பத்மா, காதலுக்கு கணவர்தான் தடையாக உள்ளதால், கணவனை கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த விஷயத்தை தனது கள்ளக்காதலன் கோபியிடம் சொல்லவும், அதற்கு அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.. பிறகு இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டனர்.

கடந்த மாதம் 24ம் தேதி இரவு, லக்ஷ்மன்நாயக் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பத்மா கோபியை வீட்டிற்கு வரவழைத்தார். பிறகு இருவரும் சேர்ந்து, தூங்கிக்கொண்டிருந்த லக்ஷ்மன்நாயக்கின் முகத்தில் துணியை வைத்து அழுத்தினார்கள்.. இதில் மூச்சு திணறி திணறியே உயிரிழந்தார். கொலை செய்த பிறகு, கோபி அங்கிருந்து அமைதியாக சென்றுவிட்டார்.

அதேபோல பத்மாவும், மறுநாள் காலை, எதுவும் நடக்காதது போல குளித்து முடித்து ரெடியாகி ஸ்கூலுக்கு கிளம்பி சென்றார். பள்ளியில் இருந்தபடியே, வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து, ‘‘என் கணவருக்கு உடம்பு சரியில்லை.. நான் ஸ்கூலுக்கு வந்துள்ளேன்.. போனை போட்டாலும் எடுக்கவே இல்லை, அவருக்கு என்ன ஆச்சோ தெரியல, சாப்பிட்டாரான்னும் தெரியல, வீட்டுக்கு சென்று அவரை பார்க்க முடியுமா’’ என்று அழுதபடி கேட்டுள்ளார். உடனே ஹவுஸ் ஓனரும், வீட்டுக்கு சென்று பார்த்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்கு வந்தார். ஆனால் அதற்குள் ஸ்கூலில் பத்மா, ‘‘என் கணவர் செத்துட்டாரு’’ என்று கதறி கதறி அழ ஆரம்பித்துவிட்டார். உடனே பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் அனைவரும் நம்பிவிட்டார்கள். பத்மாவுக்கு ஆறுதலை சொல்ல துவங்கிவிட்டனர்.

ஆனால் லக்ஷ்மன்நாயக்கின் தம்பிக்கு மட்டும் சந்தேகம் வந்தது. அவர் உடனே போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. பிறகு பத்மாவை விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்தனர். தங்கள் பாணி விசாரணையை நடத்தியபோதே, உண்மை மொத்தத்தையும் சொல்லிவிட்டார். கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பத்மா மற்றும் கோபி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஆசிரியர்கள் என்ற பெயரில் இருந்தவர்கள், இப்படியொரு கொடூர குற்றத்தில் ஈடுபட்டது, அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அதுவும் கொலையை செய்துவிட்டு, கேஷூவலாக ஸ்கூலுக்கு வந்த சம்பவம், அதற்கு மேல் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

ஐந்து நிமிட காம சுகத்திற்காக கொலை செய்துவிட்டு, பெற்ற பிள்ளைகளை அனாதையாக்குபவர்களை ‘பெற்றோர்கள்’ எனக் கூறுவதற்கே ‘நா’ கூசுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal