வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தன் கையில் வைத்திருந்த தொகுதி பங்கீடு லிஸ்டை வெளியிட, இதுதான் தே.மு.தி.க.வையும், டி.டி.வியையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக 170, பாஜக 23, பாமக 23, தேமு​திக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, தமா​கா-வுக்கு 3 இடங்​கள் என தொலைக்காட்சிகளில் ப்ளாஷ் நியூஷ் ஓடியது. இதன் பின்னணியில் அதி​முக வியூக வகுப்​பாளர்​கள் இருப்பது அதன் பிறகுதான் தெரியவந்தது.

இந்த நிலையில்தான், ‘கூட்டணி குறித்து ஜனவரியில்தான் முடிவெடுப்போம். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 6 சீட் என்பது வெறும் வதந்தி. யாரும் இதனை நம்பவேண்டாம்’ என கொந்தளித்தார் பிரேமலதா விஜயகாந்த்!

அதே போல, டி.டி.வி.தினகரனும், ‘‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராகவே ஏற்றுக்கொள்ளாத நாங்கள் எப்படி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்போம்’’ என்றார் அதிரடியாக.

பா.ஜ.க.விற்கு பாடம் புகட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொகுதி பங்கீட்டை வெளியிட்டு, கடைசியில் அவர்களுக்கே எதிராகப் போய் முடிந்திருக்கிறது.

தவிர பா.ம.க. தரப்பில் ராமதாஸிடம் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே பேசிவிட்டாராம். ‘என்னிடம்தான் ஒரிஜினல் பா.ஜ.க. இருக்கிறது’ என்கிறார் டாக்டர் ராமதாஸ். அந்த பா.ம.க.வும் தி.மு.க. பக்கம் செல்ல இருக்கிறதாம்!

நல்லா வியூகம் வகுக்குறாங்கப்பா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal