2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தில் அனைத்துக்கட்சிகளும் இறங்கிவிட்டது. ஆளும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியிலும், அ.தி.மு.க. பாஜகவுடனான தொகுதி பங்கீட்டிலும் இறங்கியிருக்கிறது.

‘2026ல் த.வெ.க. ஆட்சியைப் பிடிக்கும், விஜய் முதலமைச்சர் ஆவார்’ என த.வெ.க.வினர் அடித்துக்கூறி வருகின்றனர். விஜய்யை சுற்றியிருப்பவர்களோ, ‘2026ல் நீங்கள்தான் முதல்வர்’ என உசுப்பேத்திவிடுவதையும் நிறுத்தவில்லை.

இந்த நிலையில்தான்,தமிழ்நாட்டில் நடக்கும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் இடத்தை பிடித்து.. பிரதான எதிர்க்கட்சியாக தவெக உருவெடுக்கும் என்று உட்கட்சி சர்வே தெரிவித்து உள்ளது. அதே சமயம் தவெக இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பதால்.. அவர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமையும் இல்லையென்றால் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்பில் தெரியவந்திருக்கிறது. அதே சமயம் தி.மு.க. நடத்திய சர்வேயில் ‘மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும்’ என தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் மூத்த அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த அவசரக் கலந்துரையாடலுக்குக் காரணம், தி.மு.க.வின் (திங்க் டாங்)tலீவீஸீளீ tணீஸீளீ எனப்படு சர்வே குழு ஒன்று நடத்திய ஒரு புதிய உட்கட்சி ஆய்வுதான். இந்த ஆய்வு ஆளுங்கட்சிக்கு சாதகமான அதே சமயம் கவலைக்குரிய சில முடிவுகளை கலவையாகத் தந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டு உள்ளதாம். அதாவது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும். கண்டிப்பாக மெஜாரிட்டி தனியாக கிடைக்கும் என்று சர்வேயில் மகிழ்ச்சி செய்தி கூறப்பட்டு உள்ளதாம். இது தலைமைக்கு மிகவும் ஊக்கமளிக்கும் பகுதியாகும். ஆயினும், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது கட்சியின் வாக்கு சதவீதம் குறையக்கூடும் என்றும் அதே ஆய்வு எச்சரிக்கிறது. இந்த சரிவு கட்சியின் ஒட்டுமொத்த பலத்தைக் குறைத்து, எதிர்காலத்தில் சவால்களை உருவாக்கலாம். காரணம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என கூறப்பட்டிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி குறிப்பிட்ட ஒரு கட்சியை மட்டும் பாதிக்கவில்லை என்பதை தி.மு.க. குழு கண்டறிந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. மற்றும் பிற சிறு பிராந்தியக் குழுக்கள் உட்பட அனைத்து முக்கியக் கட்சிகளின் வாக்குத் தளத்தையும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கவர்ந்துள்ளது.

அதே சமயம், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 30% வாக்குப்பங்கைப் பெறுவோம் என்றும், மக்கள் விஜய்யை முதல்வராக விரும்புகிறார்கள் எனவும் உட்கட்சி ஆய்வுகள் மூலம் மதிப்பிட்டுள்ளது. அதாவது அந்த கட்சி சார்பாக நடத்தப்பட்ட உட்கட்சி சர்வேயில் இந்த முடிவுகள் உறுதியாகியிருக்கிறதாம். உட்கட்சி ஆய்வின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இந்த உட்கட்சி சர்வே தொடர்பாக ‘இந்தியா டுடே’ ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில், 41,453 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தி.மு.க. 32.9% ஆதரவுடன் முன்னணி வகிக்க, தொடர்ந்து த.வெ.க. 31.7% மற்றும் அ.தி.மு.க. 27.3% ஆதரவை பெற்றன. 8.1% பேர் மற்ற கட்சிகளைத் தேர்ந்தெடுத்தனர். இந்த மதிப்பீட்டில், சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் த.வெ.க.வுக்கு வலுவான கோட்டைகள் அடையாளம் காணப்பட்டன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. உட்கட்சி ஆய்வின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது. அதே சமயம் தவெக இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பதால்.. அவர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமையும் இல்லையென்றால் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதாவது அதிமுகவின் இடத்தை தவெக பிடிக்கும். தமிழக வெற்றிக் கழகம் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும். தமிழ்நாட்டில் அதிமுக இருந்ததை விட மிக குறைவான இடத்திற்கு செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் யாருக்கும் மெஜாரிட்டி இருக்காது. இதனால் தவெக யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்களுக்கே ஆட்சி செய்ய வாய்ப்பு வரும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆக மொத்தத்தில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என விஜய் கூறுவது நிரூபணமாகிவிடுமோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal