‘த.வெ.க. தலைவர் விஜய்யின் அவதூறு பிரச்சாரங்கள் அவரது மேடையிலேயே ‘புஸ்வானங்கள்’ ஆகிவிடுகிறது’ என மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார்.

தி.மு.க.வின் செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘#அவதூறு #புஸ்வானங்கள்’’ என்ற தலைப்பில்,
‘‘விஜய் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் ‘தமிழகம் தான் இந்தியாவிலேயே அமைதியும் வளர்ச்சியும் நிறைந்த மாநிலம்’ என ஆற்காடு நவாப் பேசியதும்…
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பொத்தாம் பொதுவாக ஈரோட்டில் புழுதிவாரி தூற்றி விட்டு..
விஜய் தனது பனையூர் பங்களாவுக்கு வந்து பதுங்குவதற்குள் அவர் கட்சியின் மாவட்ட செயலாளர் மகளிரணி நிர்வாகி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து காமக் கூத்து நடத்தி பொதுமக்களிடம் கையும் களவுமாக அகப்பட்டதும் என…
திமுக மீது குறிவைத்து அவதூறுகளில் ஊறவைக்கப்பட்ட விஜய்யின் வன்மம் நிறைந்த குற்றச்சாட்டுகள் அவர் அமைத்த மேடைகளிலும் அவரது கட்சியினராலுமே முறியடிக்கப் பட்டு வருகிறது…
உண்மைக்கு மாறான பஞ்ச் வசனங்கள் பீறிட்டுக் கிளம்புமே தவிர எப்போதுமே அவை எல்லையை அடையாத புஸ்வானங்கள் என்பதை பால்வாடிக் கட்சித் தலைவர் விளங்கிக் கொள்ள வேண்டும்…’’ என பதிவிட்டிருக்கிறார்.
சினிமாவில் எடுபடும் ‘பஞ்ச்’ வசனங்கள், பாமரமக்களிடம் எடுபடுமா..?
