தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க.தி.மு.க.விற்கு சரியான நேரத்தில் தக்க பதிலடியைக் கொடுத்து வருகிறது அ.தி.மு.க. ஐ.டி.விங்.
இந்த நிலையில்தான் வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து அதற்கான 234 விருப்ப மனுக்களை இன்று அதிமுக ஐடி விங் சார்பில் வழங்கி உள்ளனர்.
அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்களை பெறுவதற்கான பணிகள் கடந்த 15 ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் வரும் 23 ஆம் தேதி வரை, தினமும் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, ரூ.15,000-க்கு டி.டி எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர், சென்னை அதிமுக தலைமை அலுவலகம் வந்து, விருப்ப மனுக்களை பெற்று பணம் செலுத்தி விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். மேலும், தங்கள் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து பலரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து அதற்கான 234 விருப்ப மனுக்களை இன்று அதிமுக ஐடி விங் சார்பில் வழங்கி உள்ளனர்.
