செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்​டத்​தில் தாம்​பரம், பல்​லா​வரம், சோழிங்​கநல்​லூர், மது​ராந்​தகம், செய்​யூர், செங்கல்பட்டு, திருப்​போரூர் ஆகிய 7 சட்​டப்​பேரவை தொகுதிகள் உள்ளன.

மொத்​த​முள்ள 27,87,362 வாக்​காளர்​களில் 7,01,901 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. இரட்​டைப் பதிவு, இறந்​தவர்​கள் மற்​றும் இடம்​பெயர்ந்த வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​ட​தால், வாக்​காளர் எண்​ணிக்கை 20,85,464 ஆகக் குறைந்​துள்​ளது. இது மொத்த வாக்​காளர்​களில் 25.18% ஆகும்.

சோழிங்​கநல்​லூர் தொகுதி மொத்த வாக்​காளர் எண்ணிக்கை 7,02,450, நீக்​கம் – 2,18,444, இறுதி வாக்​காளர் எண்​ணிக்​கை- 4,84,005.

பல்​லா​வரம் மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை – 4,44,498, நீக்​கம்- 1,49,789, இறுதி வாக்​காளர் எண்​ணிக்கை – 2,94,712.

தாம்பரம் மொத்த வாக்​காளர் எண்ணிக்கை – 4,15,483, நீக்கம் – 1,21,137, இறுதி வாக்​காளர் எண்​ணிக்கை – 2,94,346.

செங்​கல்​பட்டு மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை – 4,45,500, நீக்​கம்- 1,06,270, இறுதி வாக்​காளர் எண்​ணிக்கை – 3,39,231.

திருப்​போரூர் மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை – 3,19,534, நீக்​கம் – 47,558, இறுதி வாக்​காளர் எண்​ணிக்கை – 2,71,976.

செய்​யூர் மொத்த வாக்​காளர் எண்ணிக்கை – 2,28,255, நீக்கம் – 32,394, இறுதி வாக்​காளர் எண்​ணிக்கை – 1,95,861.

மது​ராந்​தகம் மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை – 2,31,642, நீக்​கம் – 26,309, இறுதி வாக்​காளர் எண்​ணிக்கை 2,05,333.

அதி​கபட்​ச​மாக, சோழிங்​கநல்​லூர் சட்​டப்​பேரவை தொகுதியில் 2,18,444 வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதன் மூலம் சோழிங்​கநல்​லூரின் மொத்த வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 7,02,450-லிருந்து 4,84,005 ஆகக் குறைந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal