‘‘இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்று வண்ணம், அடுத்து வரும் அம்மாவின்10 வது ஆண்டு நினைவுநாளில் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலர்ந்து இருக்கும்’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சூளுரைத்திருக்கிறார்.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவி அம்மாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கழக ரீதியில் உள்ள 82 மாவட்டங்களிலும் அம்மாவின் திருவுருபடத்தை அலங்கரித்து, கழகத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கி வருகிறார்கள். இதனை தொடர்ந்து கழக மருத்துவரணி சார்பில் பந்தல்குடி உள்பட மதுரையில் பல்வேறு இடங்களில் கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கூறியதாவது;

‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 53 ஆண்டு கால வரலாற்றில், புரட்சித்தலைவர் மறைவிற்குப் பின்னால், புரட்சித்தலைவி அம்மா 16 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார். குறிப்பாக இந்தியாவே உற்று நோக்கு வகையில் திட்டங்களை செய்தார் .மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் 14 வகை கல்வி உபகரணங்கள், தாலிக்கு தங்கம் திட்டம், கிராமப்புற பெண்கள் முன்னேற்றம் அடைய கறவை மாடுகள் ஆடுகள் திட்டம், பெண் கமாண்டோ படைகள், மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சுயஉதவிகுழுக்கள் இவையெல்லாம் உருவாக்கி வரலாற்று புரட்சி படைத்தார்.

அம்மாவின் மறைவிற்குப் பின் நான்கரை ஆண்டுகள் எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி செய்தார் அம்மாவின் திட்டங்களை எல்லாம் தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு வழங்கியது மட்டுமல்லாது ,அம்மாவின் கனவு திட்டமான உழைக்கும்பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டத்தை மூன்று லட்சம் பெண்களுக்கு வழங்கினார் அதே போன்று உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்தி அதை நிறைவேற்றிக் காட்டினார்.

குறிப்பாக இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சியத்தை,தனது தாரக மந்திரமாகக் கொண்டு கடுமையாக களப்பணி ஆற்றி இன்றைக்கு திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக உள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டு காலம் எடப்பாடியார் ஆட்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்த தமிழகம் இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் இந்தியாவிலே கரைப்பிடித்த ஆட்சியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் ஆக உள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகாலம் குடும்ப நலத்தை மட்டும் சிந்தித்த ஸ்டாலின் தற்பொழுது தேர்தல் வரப்போகிறது என்று மக்களைப் பற்றி சிந்திப்பதாக பாசாங்கு காட்டி வருகிறார் .கருவாடு ஒருபோதும் மீன் ஆகாது அதுபோல ஸ்டாலின் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

525 தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதில் 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றிவிட்டு மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற நினைக்கிறார். பஞ்சபூதங்களில் திமுக ஊழல் செய்து வருகிறது சென்னையில் மழை நீர் வடிகால் பணியில் 5000 கோடி அளவில் ஊழல் செய்துள்ளது ,அதேபோல மணலில் 4000 கோடி அளவில் முறையீடு செய்தது மட்டுமல்ல எங்கு பார்த்தாலும் அனுமதி இல்லாமல் மண் அள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கஜானா அதல பாதாளத்தில் உள்ளது ஆனால் ஸ்டாலின் குடும்பத்தின் கஜானா விண்ணை மட்டும் அளவில் உள்ளது. இனிமேல் எத்தனை பகல் வேஷம் போட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

மீண்டும் தமிழகத்தில் ஒளிமயமான எதிர்காலம் உருவாக்குவோம் இந்தியாவிலேயே மீண்டும் தமிழகத்தில் முதன்மை மாநிலமாக வேண்டுமென்றால், எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும். வருகின்ற 2026 தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில், அம்மாவின் ஆட்சி மலர அம்மாவின் 9 வது நினைவு நாளில் நாம் சூளுரை ஏற்க வேண்டும் அடுத்த ஆண்டு வரும் பத்தாவது ஆண்டு நினைவு நாளில் தமிழகத்தில் எடப்பாடியாரின் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலர்ந்திருக்கும்’’ என சூளுரைத்தார் டாக்டர் பா.சரவணன்!

அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனின் சூளுரைதான் ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal