அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைவார்கள் என்றுதி எதிர்பார்த்த நிலையில், திமுகவில் இருந்து இரண்டு 2 அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

‘‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல.. திமுகவில் இருந்து இரண்டு அமைச்சர்கள் எங்கள் பக்கம் வருவார்கள். மக்கள் சக்தி எங்கே இருக்கிறதோ அங்கே அமைச்சர்கள் வருவார்கள், அரசியல்வாதிகள் வருவார்கள்.

திமுகவில் உள்ள சிட்டிங் அமைச்சர்கள் வருவார்கள். பிப்ரவரி மாதம் இது நடக்கும். நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள்’’ என்று ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் முன்னணி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். கடந்த வாரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதிமுக தரப்பில் விசாரித்ததில் இது வெறும் டீசர்தான் என்கிறார்கள். மெயின் பிக்சர் இனிதான் என்கிறார்கள். அதாவது கொங்கு மண்டலத்தில் இருந்து இன்னொரு தலைவர், சென்னையில் இருந்து ஒருவர், டெல்டாவில் இருந்து இருவர் என்று இன்னும் 4 தலைகள் விரைவில் தவெகவிற்கு தாவ போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அதிமுக தலைவர்ளிடம் செங்கோட்டையன்தான் பேசி வருகிறாராம்.

தவிர, அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் திருச்சியில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரும் விரைவில் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal