‘‘கட்சியை பிளவு படுத்த வேண்டும் என்பது அன்புமணியின் நோக்கம். கட்சியை அழிக்க வேண்டும். வன்னிய ஜாதியை அழிக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் அது எங்கள் மருத்துவர் ஐயா உயிருடன் இருக்கும் வரை நிறைவேறாது’’ என பாமக எம்.எல்.ஏ அருள் எச்சரித்துள்ளார்.

ராமதாஸ் தரப்பான பாமக எம்.எல். ஏக்களான அருள், ஜி.கே.மணி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர், அப்போது இருவரும், ‘‘ எல்லாம் ஒரே தரப்பு தான். எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி தான். மருத்துவர் அய்யா தான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் பிரிவாக செயல்படுவது அநாகரிகமானது. மருத்துவர் ஐயாவுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகமாகத்தான் பார்க்கிறோம்.

சபாநாயகர் எங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? சட்டமன்ற குழுவுக்கு, சட்டமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மருத்துவர் அய்யா. அவர்களால் தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறோம். அவர்தான் நியமனம் செய்தது. அவரை எதிர்த்து கொண்டு நாங்கள் தனியாக இருக்கிறோம் என்று சொல்வது எப்படி நியாயமாக இருக்கும்?

மருத்துவர் ஐயா பின்னால் இருப்பது தான் நியாயம். அதுதான் சட்டம். அடுதான் தர்மம். அதுதான் நீதி. அதை விட்டு விட்டு அவருக்கு துரோகம் செய்யக்கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும். இதை குடும்பச் சண்டை என்று சொல்லவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? யாரால் வந்தோம்? மருத்துவர் ஐயா அவர்களால், அந்த தொகுதி மக்களால் பாட்டாளி மக்கள் கட்சியால் வந்துவிட்டு அவர்களைப் பற்றி கொச்சைப்படுத்தலாமா? சும்மா வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். முழுக்க முழுக்க மருத்துவர் ராமதாஸ் அவர்களை கொச்சைப்படுத்துவதை, பாமகவை அவமானப்படுத்துவதாக தான் பார்க்கிறோம்.

அவர்கள் மக்கள் பிரச்சினையை பேசுவதற்காக குரல் எழுப்பவில்லை. அவர்கள் ஐயாவை கொச்சைப்படுத்திவதற்காக குரல் எழுப்பி இருக்கிறார்கள். அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி என்று எங்களை சொல்லக்கூடாது என்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கியது யார்? நடத்தியது யார்? பாட்டாளி மக்கள் கட்சி என்றால் நாட்டில் யாரை சொல்வார்கள்? மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களைத்தான் சொல்வார்கள். அவர்தான் அடையாளம். அன்புமணியை அடையாளம் காட்டியது யார்? மருத்துவர் ஐயா அவர்கள் தானே? இழிவுபடுத்துவது அவர்களது நோக்கம். கட்சியை அழிக்க வேண்டும், வன்னியர் ஜாதியை அளிக்க வேண்டும் என்பதுதான் அன்புமணியின் நோக்கம். அதை நிறைவேறாது. மருத்துவர் ஐயா உயிரோடு இருக்கும் வரை நிறைவேறாது. 

கட்சியை பிளவுபடுத்துவது யாருக்கும் நல்லதல்ல. அது கட்சிக்கு தான் நட்டம். கொஞ்சமாவது நன்றி உணர்வு வேண்டாமா? நன்றி உணர்வு இல்லாமல் அவர் பேசுவதை கொச்சைப்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மக்களை பேச ஆரம்பித்து விட்டார்கள். எல்லா கட்சித் தலைவர்களும் பேச ஆரம்பித்து விட்டார்கள். மருத்துவர் ஐயாவுக்கு இப்படியா? இந்த மாதிரி சோதனையில் ராமதாஸ் இருக்கிறாரா? எனக் கேட்கிறார்கள். இது நல்லதல்ல ’’ என ஆவேசமாகப் பேசினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal