தலித் சமூகத்தை சார்ந்த பாஜக பிரச்சார பிரிவு நிர்வாகி ஃபயர் சதீஷ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. பிரமுகருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பாஜகவின் ஃபயர் சதீஷ் என்பவர் உர விற்பனை தொடர்பான தொழிலை செய்துவருகிறார். இச்சூழலில் மூன்று மாநிலத்தை சேர்ந்த உர மாஃபியாக்கள் தொழில்போட்டியில் விட்டுக்கொடுக்கச் சொல்லி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். ஃபயர் சதீஷுக்கு நெருக்கடிக் கொடுக்க வைத்ததே பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரமுகர்தான் என்கிறார்கள். எம்.இ.பி. தொழில்துறை வளாகத்திலும் டெல்லியில் கோலோச்சுபவரின் பெயரைச் சொல்லி பாலியல் சர்ச்சைப் புள்ளியும் மற்றும் அவரின் அவரது ஆதரவாளர் ஒருவரும் நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
நம்மிடம் பேசிய பா.ஜ.க.வினர்‘‘உர விற்பனை மார்க்கெட்டுகளை கண்காணித்தும் சரக்கு சப்ளை செய்தும் வருகிறார் ஃபயர் சதீஷ். அதனை தனது கன்ட்ரோலில் வைக்க அதிகார போட்டியில் இறங்கியிருக்கிறார் பாலியல் சர்ச்சைப் புள்ளி மற்றும் அவரது ஆதரவாளர் ஒருவரும். இச்சூழலில், பாலியல் சர்ச்சைப் புள்ளியின் ஆதரவாளர் ஃபயர் சதீஷை போனில் தொடர்பு கொண்டு ‘‘நீ என்ன ஆட்டிடுவ… உன்ன காலி பண்ணிடுவேன்… வீட்டுக்கே வந்து…… 12 மணி நேரம் தான் டைம்…வாட்சப் பேஸ்புக்ல போட்டாலும் உன்னை காலி பண்ணிடுவேன்’’ என கொடூரமான கொலை மிரட்டலை விடுத்திருக்கிறார். பாலியல் வழக்கில் சிக்கிய ‘பாபா’ மற்றும் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள்தான் இவர்கள்’’ என்றனர்.
பாஜகவுக்கும் தொலைபேசியில் மிரட்டிய புள்ளிக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர்கள் ‘‘பாலியல் சர்ச்சைப் புள்ளி ஆதரவுடன் குறுக்கு வழியில் தகுதி இல்லாமல் கட்சியில் சேர்ந்தவர். அப்படி என்ன இவர்களுக்குள் உள்ள நெருக்கம் என்றால் பாலியில் சர்ச்சைப் புள்ளி ‘கேஸ்’ இல்லாமல் ப்ரொபஷனல் திறமையும் இல்லாததால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு சாதாரண ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தவர். அப்பொழுது அந்தப் புள்ளியும் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்.
இருவருக்கும் ‘பாபா’ மற்றும் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட நபருடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் மேலிட ‘பெண்’ சக்தியுடன் உடன் பழக்கம் ஏற்பட்டது. பாலியல் சர்ச்சைப் புள்ளி தனக்கு மிகப்பெரிய அரசியல் லைன் உள்ளது என பெருமை கொண்டு பெண் ‘சக்தி’ ஆதரவுடன் அவர்களின் பெயரைக் கூறியும். தன் ஆதரவாளரை வைத்து தாம்பரம் எம்.இ.பி. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் ஒப்பந்தங்களையும் கண்ட்ரோல் செய்து பணம் பறித்து வருகிறார்கள்.
நிர்வாகிகளை மிரட்டுதல் தொழில்துறை ஒப்பந்தங்களில் தலையிடுதல் போட்டி வர்த்தக நிறுவனங்களுக்கு தொல்லை கொடுத்து மிரட்டல் வன்முறை என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த பாலியல் சர்ச்சை கும்பலால் மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். பாலியல் சர்ச்சையில் சிக்கி சில மாதங்களை ஆணை நிலையில் மறுபடியும் சர்ச்சையில் மாட்டியிருப்பது தெரியவந்துள்ளது’’ என்றனர்
