பீகாரை போலவே தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் தமாகா கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சந்தித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே.வாசன் “மரியாதை நிமித்தமாகவும் சந்தித்தேன்” என்று அவர் கூறினார். இது NDA கூட்டணியின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “எது தேவையோ, அவசியமோ அதை மட்டுமே தமாகா பேசும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகரிக்க ஈபிஎஸ்தான் காரணம்” என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், இபிஎஸ் 170க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு சென்று மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து வந்துள்ளதாகவும், எனவே NDA கூட்டணி வலிமை பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார். “பீகாரை போலவே தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று அவர் கணித்தார்.

ஜி.கே.வாசன் மேலும், “NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் மேலும் பல கட்சிகள் வர உள்ளன” என்று உறுதிப்படுத்தினார். இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. அதிமுக-தமாகா கூட்டணி, திமுகவுக்கு எதிரான மாற்று சக்தியாக உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமாகா, NDA-வின் முக்கிய கூட்டணி கட்சியாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal