‘‘அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆவது எல்லாம் சினிமாவில்தான் முடியும், அரசியலில் முடியாது’’ என தவெக தலைவர் விஜய் குறித்து நடிகை ரோஜா மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லெனின் பாண்டியன் திரைப்படத்தில் நடித்துள்ள ரோஜா, அந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள் நடிகர்களெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்று கூறினார்.
விஜய் நேரில் சென்றதால் தான் இந்த பிரச்சனை என்று திட்டுகிறார்கள், ஆனால் அதன் பிறகு நேரில் செல்லவில்லை என்றும் திட்டுகிறார்கள் எனக் கூறினார்.
தமிழக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது, திட்டங்களால் மட்டுமே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனவும், தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு உள்ள அரசியல் சூழல்தான் தேர்தல் முடிவை முடிவு செய்யும் என்றும் ரோஜா கூறினார்.
