அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு இல்லை என்ற பேச்சுகள் தொடரும் நிலையில், தி.மு.க.வில் உடன் பிறப்புக்களின் உள்குத்துகள் அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுக கவுன்சிலர்களுக்கு இந்த நடவடிக்கையில் அதிமுக கவுன்சிலர்களும் உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் பரிதா நவாப் என்பவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நகராட்சி மன்றத்தில் நடைபெற்றது. இந்த தீர்மானம் வெற்றி பெற்றது.

இந்த தீர்மானத்திற்கு வாக்களிக்க வந்திருந்த 33 பேரில், 23 திமுக கவுன்சிலர்கள், ஒரு காங்கிரஸ், ஒரு அதிமுக மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலர்கள் ஆவர். தீர்மானத்துக்கு ஆதரவாக 26 கவுன்சிலர்கள் வாக்களித்ததை அடுத்து, இந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுவதற்காக, திமுகவினர் கவுன்சிலர்களை பாதுகாப்பாக ஊட்டிக்கு அழைத்து சென்றதாகவும், வாக்களிக்கும் நேரத்தில் சரியாக வந்து அவர்கள் வாக்களித்ததால் இந்த தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal