தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
விஜய் தலைமையில்தான் தவெக தேர்தலை சந்திக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
