‘‘பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை அமித் ஷாவிடம் விழுந்து சரண்டராகிவிட்டார் எடப்பாடி’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறார்.

தி.மு.க. வாக்குச் சாவடி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘ பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை அமித் ஷாவிடம் விழுந்து சரண்டராகிவிட்டார் எடப்பாடி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியை தமிழ்நாடு மக்களும் விரும்பவில்லை; அதிமுகவினரும் விரும்பவில்லை. மற்ற எந்த கட்சியினரும் அதிமுக, பாஜக கூட்டணிக்கு போகவில்லை.

மக்களோடு களத்தில் நின்று எதையும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவுக்கு மட்டும்தான் உண்டு. விசிக, கம்யூனிஸ்ட், காங். என எல்லோரையும் கூட்டணிக்கு அழைத்து பார்த்தார்கள்; யாரும் செல்லவில்லை. எதிர்க்கட்சியான அதிமுக தனது சொந்த கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வைத்திருக்கிறது’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal