திருச்சியில் வரலாறு காணாத கூட்டத்தைக் கூட்டி திராவிடக் கட்சிகளையே திக்குமுக்காட வைத்துவிட்டார் விஜய்!

இந்த நிலையில்தான் வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன், ‘‘நடிகர் வடிவேலு ஒரு இடத்திற்குச் சென்றால்கூட கூட்டம் கூடும்’’ எனத் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ‘‘திமுக கூட்டணி வெற்றியில் தவெக எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது’’ என்றும் அவர் தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ‘‘இன்று பிரச்சாரம் துவங்குகின்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள். இப்பொழுதுதான் அவரது களப்பணிகள் தீவிரமடைகின்றன. விஜயின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும். ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்.” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக வலுவாக இருக்கிறது என்றால், அது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான். அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவத்தைப் பெறவில்லை. விஜய் தனியாக செல்வார் என்றுதான் கூறுகிறார்கள். தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருக்கிறது. ஆனால் அது இன்னும் வடிவம் பெறவில்லை” என்றார்.

எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களத்தைச் சந்திக்கப் போகிறார்கள். அணியாக சந்திப்பதற்கு வாய்ப்பில்லை. திமுக கூட்டணி கட்சிகள் இடம் மாறுவதற்கு எந்தத் தேவையும் இல்லை என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களிலும் ஏராளமான மக்கள் திரள்கின்றனர். மக்கள் திரள்வதை வைத்து எதுவும் கூறமுடியாது. நடிகர் வடிவேலு ஒரு இடத்துக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தினால் கூட லட்சக்கணக்கில் மக்கள் திரளலாம். கூட்டத்தை வைத்து தேர்தல் முடிவாக இருக்கும் எனக் கருத முடியாது.” என்று தெரிவித்தார்.

‘வடிவேலுவுக்குக் கூட கூட்டம் கூடுது’ என பேசியிருக்கும் தொல் திருமாவின் பேச்சு ‘காமெடி’யா என்பது வருகிற 2026ல் தெரிந்துவிடும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal