பிரதமர் நரேந்திர மோடியை , ராஜ்யசபா எம்.பி.,யும், நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான நடிகர் கமல்ஹாசன் கடந்த ஜூலை 25ம் தேதி டில்லி சென்று எம்.பி.,யாக பதவியேற்று கொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் இன்று ஆகஸ்ட் 7 பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‘‘பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும், தமிழகத்தின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளை தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.

தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்க சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்’’ இவ்வாறு அந்த பதிவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal