புற்றுநோய் என்றாலே மரணம்தான் என்ற அச்சத்தை ‘மாதாமகள்’ நிகழ்ச்சியின் மூலம் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!

தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஆலடி அருணா நர்சிங் கல்லூரி சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாமை நடத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா. இந்த முகாமில் ஏராளமான நர்சிங் மாணவிகள், பெண்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலடி அருணா அறக்கட்டளை செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியின் வாயிலாக புற்றுநோய் விழிப்புணர்வுகளை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் நர்சிங் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவும் பேசினார்கள். புற்றுநோய் குறித்த ஏராளமான விழிப்புணர்வுகளை பெண்களுக்கு எடுத்துக் கூறினார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!

‘புற்றுநோய் என்றாலே இறந்துவிடுவோம்’ என்ற அச்சத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக துரத்தி அடித்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ‘மாதாமகள்’ என்று பெயர் வைத்திருந்தார் பூங்கோதை ஆலடி அருணா. இது பற்றி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கேட்டதற்கு, ‘பிதாமகன்’ என்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள். ‘மாதாமகள்’ என்று எதற்காக பெயர் வைத்திருக்கிறேன் என்றால், நம்ம வந்து நம்முடைய அம்மாக்களுக்கு, தாய்மார்களுக்கு கேன்சர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இலவசமாக முகாம்களை அமைத்து அதன் மூலம் சோதனை செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது தலைமுறையை காக்கும்’’ என்று கூறினார் பூங்கோதை ஆலடி அருணா

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஏற்பாடு செய்த ‘மாதாமகள்’ புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சி குறித்து முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசும்போது, ‘‘ஆணாதிக்கம் மிகுந்த உலகத்தில், சமுதாயத்தில் பெண்களின் உடல்நலன் என்பது மிக முக்கியம். பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு என்பதை கொண்டுவந்தவர் தலைவர் கலைஞர். எனவே, பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களை புற்றுநோய் என்ற அச்சத்திலிருந்து விடுபட வைக்கவேண்டும்’’ என்றார்.

‘மாதாமகள்’ என்பது பெண்களுக்கான ஒரு முக்கியமான நிகழ்வு. இதில், மார்பக புற்றுநோய், கர்பப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பூங்கோதை ஆலடி அருணாவிற்கு பாராட்டுகள் குவிகிறது. அதாவது, பதவியிலும், பொறுப்பிலும் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கான சேவைகளை ஆற்றி வருகிறார் பூங்கோதை ஆலடி அருணா என்கிறார்கள் அப்பகுதி மக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal