அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.ஸை முழுமையாக ஓரங்கட்டியபிறகு அ.தி.மு.க.விற்கு தென்மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்று பேசப்பட்டது. இதனை உடைத்தெறிந்து ‘தென்மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இருக்கிறது’ என்பதை நிரூபிக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் சென்று தனது செல்வாக்கை நிரூபித்த நிலையில் இன்று முதல் தென்மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி உருவாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவது இதுவே முதன்முறையாகும். அதிமுக – பாஜக கூட்டணி மலர்ந்த போதிலும், இரு தரப்புக்கும் இடையே சில விவகாரங்களில் ஒத்துப்போகவில்லை என்றே தெரிகிறது. அதாவது, கூட்டணி ஆட்சிதான் அமையும் என பாஜக தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.. அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக சொல்லி வருகிறார்.. இந்த சலசலப்புக்கு நடுவேதான், மோடி – எடப்பாடி சந்திப்பு நடந்துள்ளது… ஆனால், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியிடம் நேரம் ஒதுக்குமாறு ஓபிஎஸ் அனுமதி கேட்டும் மோடி நேரம் ஒதுக்கவில்லை..

அதிமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி அழுத்தம் திருத்தமாக சொன்ன நிலையில், அவரை சந்திப்பது சரியாக இருக்காது என்று மோடி நினைக்கிறாராம்.. இப்படி அரசியல் கணக்குகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கூட்டணியையும் வலுப்படுத்தி வருகிறார்.

இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இணைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியால் அழைப்பு விடுக்கப்பட்ட எந்தக்கட்சியும் இதுவரை கூட்டணிக்கு உறுதியாக வந்து சேரவில்லை.. எனவே, ஏற்கனவே இருக்கும் தோழமைக் கட்சிகளை, கூட்டணிக்குள் கொண்டு வந்து, வலுப்படுத்த முயன்றுள்ளதாக தெரிகிறது.

மற்றொருபக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்கட்ட சுற்றுப்பயணத்தை “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி துவங்கி வடமாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களிலும் மக்களை சந்தித்தார். இந்நிலையில், இன்று அதாவது செவ்வாய்க்கிழமை முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இதன்படி இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகில் அவர் பேசுகிறார். பின்னர் மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் பேசுகிறார்.

இரவு 7.45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலில் பேசுகிறார். இன்று இரவு சிவகங்கையில் தங்கும் எடப்பாடி பழனிசாமி, நாளை காலை 10 மணி அளவில் சிவகங்கை சன்ராக்ஸ் மகாலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், மஞ்சுவிரட்டு பந்தயம், வடமாடு நலச்சங்கம், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடுகிறார். மாலை 4.30 மணி அளவில் மானாமதுரை தேவர் சிலை அருகில் அவர் பேசுகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறார். சிவகங்கை மாவட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காளியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்க வேண்டும் என மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி முதலில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் நாளை மாலை 6.30 மணி அளவில் பஸ் நிலையப்பகுதியில் மக்களை சந்தித்து பேசுகிறார். இதன் பின்னர் ராமநாதபுரம் வரும் அவர் இரவு தனியார் விடுதியில் தங்குகிறார். மறுநாள் ராமநாதபுரம் மாவட்டத்திலஉள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், மீனவர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து அன்று 31-ந் தேதி மாலை 4 மணி அளவில் மீண்டும் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அரண்மனை பகுதியில் 4 மணி அளவில் மக்களை சந்தித்து பேசுகிறார்.

முன்னதாக ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் இருந்து அரண்மனை வரை ரோடு ஷோ நடத்தும் எடப்பாடி பழனிசாமி அதன்பின்னர் அரண்மனையில் மக்களை சந்தித்து பேசுகிறார். 4-வது சட்டமன்ற தொகுதியாக முதுகுளத்தூர் செல்லும் எடப்பாடி பழனிசாமி, அன்று மாலை 6.30 மணி அளவில் பஸ் நிலைய பகுதியில் மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காளியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அவரை வரவேற்று பேனர்கள், பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வரவேற்பு தோரண வாயில்கள், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal