‘அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸை இணைக்க வாய்ப்பே இல்லை’ என எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.
இந்த நிலையில்தான் சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தனிக்கட்சி தொடங்கலாமா என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கிறார். அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு என்ற அமைப்பை தொடங்கி ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவது குறித்து கருத்து கேட்பதுதான் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
