2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நெல்லையப்பர் திருக்கோவில் 519வது தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஆசியாவிலேயே உயரமான தேர் 519வது தேரோட்டமாக இன்றைய தினம் விமரிசையாக தொடங்கியது. கடந்த ஆண்டு தேரோட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் இந்தாண்டு சரி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து சிற்பங்களும் புனரமைக்கப்பட்டுள்ளது. தேர்கள் மழை, வெயிலில் சேதமடையாமல் இருக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. என கூறிய நிலையில், 2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். தேர்தல் வர உள்ளதால் பழனிசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற எத்தனை அமைப்புகள் ஒன்று சேர்ந்தாலும் ஜனநாயகக் வீழ்த்தும் சக்தி யாருக்கும் இல்லை. திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவுக்கு பின் இனி எப்போதும் திமுக ஆட்சிதான் என்பது தெரியவந்துள்ளது. என தெரிவித்தார்.
