கொரோனாவின் 3 ஆம் அலையானது வரும் நாட்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக மிக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதியாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்தது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

இதனால், பக்தர்கள் யாரும் கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியாதபடி வடக்கு, தெற்கு டோல்கேட் பகுதியிலும் மற்றும் அனுக்கிரக விலாசம் பகுதியிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கோவில் வளாகம் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அதே நேரத்தில் கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து கால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.

By admin