சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ தமிழகத்தில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்’ எனவும், நாளை (ஆகஸ்ட் 23) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 23 அன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யலாம் எனவும், ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆக.,25 அன்று
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வபோது, கனமழையும் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By admin