ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

கல்வி
  •  
  •  
  •  
  •  

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வரும் 23ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் தங்களின் மதிப்பெண் பட்டியலை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளி மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 தேதி அன்று காலை 11.00 மணி முதல் 31.08.2021 தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.