மாமனாருக்கு விசம் வைத்த மருமகளுக்கு ‘காப்பு’!

Uncategorized குற்றம்
  •  
  •  
  •  
  •  

இராமநாதபுரம்‌ மாவட்டம்
முதுகுளத்தூர் அருகே மருமகள் ஒருவரே தனது மாமனாருக்கு சாப்பிடும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு கோபால், வேணி, வினோபராஜ், கோமதி என்ற நான்கு பிள்ளைகள். உள்ளது இதில் கோபால் மற்றும் கோமதி ஆகிய இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவராக உள்ளனர். அவரது மகன் வினோபாராஜ்க்கும் , கனிமொழிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கனிமொழி மாமனார் முருகேசன் என்பவர் பாலியல் ரீதியா தொந்தரவு கொடுத்ததாகவும் இதனால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கடந்த ஜூலை 29ம் தேதி மதியம் முருகே சனுக்கு சாப்பாட்டை தட்டில் போட்டு வைத்துவிட்டு அவர் சாப்பிடும் குழம்பில் எலி மருந்து மற்றும் குருணை மருந்தை யாருக்கும் தெரியாமல் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சாப்பிட்ட அவர் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக சிகிச்சைக்காக அபிராமம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் அவர் வைத்த சாப்பாடு தட்டை கீழே கொட்டியபோது 15 கோழிகளுக்கு மேல் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் முருகேசனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் ஆத்திரமடைந்த அவரது மருமகள் கனிமொழி முப்பதாம் தேதி இரவு சாப்பாட்டில் மீண்டும் விஷ வைத்துள்ளார். இதனடிப்படையில் சாப்பிடும்போது மருந்து வாடை வருவதாக அவரது மருமகன் முருகனிடம் முருகேசன் கூறியதாக தெரியவருகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஜூலை 30ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். தனது தந்தைக்கு குழம்பில் விஷம் வைத்து பாதிப்பு ஏற்பட்ட விஷயம் (தகவல்) அவரது மகன் வினோபாராஜ்க்கு தெரியவில்லை. தனது தந்தைக்கு வயிற்றுவலி என்ற அடிப்படையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த முருகேசனின் உடல் சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு கேளல் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் எரியூட்டப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்துமுருகேசன் முருகேசன் வீட்டைச்சுற்றி கோழிகள் இறந்தது கிடந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியதும் வினா பாராஜ் தந்தைக்கும் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக செய்தி பரவியது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் வினோபா ராஜ் அவரது மனைவி கனிமொழியிடம் கேட்டுள்ளார், அப்பொழுது கனிமொழி நான் தான் குழம்பில் விஷம் வைத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டார். இதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வினோபாராஜ் தனது தந்தைக்கு விஷம் வைத்துக் கொண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தியதில் முருகேசன் மருமகள் கனிமொழி என்பவர் அவரது மாமனார்க்கு சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்ற கொன்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் மேலும் விசாரணையில் ஈடுபட்டபோது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கனிமொழி என்ற பெண் கீழக்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணனிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாமனாரை சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கனிமொழியை நிலக்கோட்டை சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தனர். மாமனாருக்கு மருமகள் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.