கனிம வளங்களை காக்க களமிறங்கிய குமரி மாவட்ட ‘பச்சைத் தமிழகம்’

அரசியல்
  •  
  •  
  •  
  •  

குமரி மாவட்ட கனிம வளங்கள் சுயநலவாதிகளின் அசுர பசிக்கு இரையாகி வருவதால் குமரியின் இயற்கை சூழலே கேள்விக்குறியாகி வருவதோடு மழை வளமும், நீர் ஆதாரங்களும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவதால் வருங்கால தலைமுறை வாழவே தகுதியற்றப் பகுதியாக குமரி மாவட்டம் மாறிப் போகும் அவலம் எதிர்நோக்கிடும் நிலை உள்ளது.

எனவே இதனைத் தடுத்திடவும், இயற்கை வளங்களைப் பாதுகாத்திடவும் வலியுறுத்தி களியக்காவிளை தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தெருமுனை பிரச்சார பயணம் பச்சைத் தமிழகம் கட்சியின் சார்பில் 3 நாட்கள் நடந்தது.

காவல்துறையின் அனுமதி மறுப்பு, கெடுபிடிகள், கண்காணிப்பு, நெருக்கடிகள் என பல்வேறு தடைகளை தாண்டி இந்நிகழ்ச்சி பொதுமக்களின் அமோக வரவேற்புடன் வெற்றிகரமாக நடந்த்து.

கட்சியின் மாநில தலைவர் . முனைவர். சுப.உதயகுமாரன் தலைமையில் இப்பிரச்சார பயணம் நடந்தது. களியக்காவிளை தொடங்கிய இப் பயணம் குழித்துறை சந்திப்பு, மார்த்தாண்டம் சந்திப்பு, சுவாமியார் மடம், அழகியமண்டபம் சந்திப்பு, தக்கலை சந்திப்பு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேப்பமூடு சந்திப்பு, கொட்டாரம் , வழியாக கன்னியாகுமரியினை வந்து அடைந்தது.

இப்பிரச்சார பயணத்திற்கு குழித்துறை சந்திப்பு பகுதியில் பெரியார் தொழிலாளர் கழக தலைவர் திரு. நீதி அரசர், சுவாமியார் மடம் பகுதியில் த .மு .மு .க மாவட்ட துணை தலைவர் திரு. கரீம், அழகியமண்டபம் பகுதியில் சமூக ஆர்வலர் .சந்தோஷ், தக்கலை பகுதியில் சமூக பொது நல இயக்க (மத்திய) மாவட்ட தலைவர் Adv.ராஜேந்திரன் , , நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் திரு.ரசூல், வேப்பமூடு சந்திப்பு பகுதியில் சமூக பொது நல இயக்க | மேற்கு) மாவட்ட தலைவர்,Adv.திலகர், கொட்டாரம் பகுதியில் விவசாய தொழிலாளர் சங்க தலைவர்.திரு.ரவி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் தென் மண்டலத் தலைவர் திரு. A. S. சங்கரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர். Adv.முராரி, குமரி மாவட்ட செயலாளர் .திரு .செளந்தர்ராஜன், மாவட்ட துணை தலைவர் .திரு . ஜீ டிட்டைட்டஸ்ராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர்.திரு. வேதக் கண், கலை இலக்கிய பிரிவின் மாவட்ட தலைவர் .பேரா ராஜேஷ், துணை தலைவர் .பேரா ஜெபா, குளச்சல் நகர பொறுப்பாளர் .துளசிதாஸ், தோவாளை ஒன்றிய துணை செயலாளர் திரு.ரமேஷ், ஆரல்வாய்மொழி பேரூர் தலைவர் .திரு .சுந்தரம், தொண்டர் அணி தலைவர். திரு.சாந்தப்பன், இளைஞர் அணித்தலைவர்.திரு.சுடலை, நிர்வாகிகள். பாலகிருஷ்ணன், செல்வமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.