கூட்டத்தை கலைக்க காவல் துறைக்கு கூடுதல் பயிற்சி.

காவல்
  •  
  •  
  •  
  •  

பெரம்பலூர்,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி இன்று 17.08.2021-ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தினை எவ்வாறு கையாண்டு கலைப்பது என்பது குறித்த பயிற்சி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கிய பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் காவலர்களுக்கு கலவர கூட்டத்தினை அனுகும் முறையினையினையும், கூட்டத்தினை கலைப்பதற்கு என்ன என்ன யுத்திகளை பயன்படுத்திகிறோம் என்பது குறித்தும் துணைக் காவல் கணகாணிப்பாளர் திரு.சுப்பாராமன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு.சுப்பையா பயிற்சி வழங்கினார்கள். இந்த பயிற்சியில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.