assembly

தமிழக அரசின் அனைத்து துறைகளும் படிப்படியாக மின் ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தத் துறைகளில் காதிதங்களின் புழக்கம் பெருமளவில் குறைந்திருக்கிறது. மேலும், மின் ஆளுமை மூலம் குறுகிய காலத்தில் தகவல் தொடர்பும் நடைபெற்றுவிடுகிறது.

சபாநாயகர் அறிவிப்பு

கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) காகிதவடிவில்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை சட்டசபைக்குள் இந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் தற்போது காகித நடமாட்டத்தை குறைத்து எலக்ட்ரானிக் முறையை அவை நடவடிக்கைகளில் புகுத்த சட்டசபை செயலகம் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட், காதிக வடிவில் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

தற்போது 13-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை மின்னணு நிதிநிலை அறிக்கையாக (இ-பட்ஜெட்டாக) தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள், கலைவாணர் அரங்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சட்டசபையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.யின் இருக்கையிலும் கணினிகள் (சி.பி.யு. உள்ளடக்கிய ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்) பொருத்தப்பட்டு வருகின்றன. எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமல்லாமல், சபாநாயகர், அரசு அதிகாரிகளின் இருக்கைகளிலும் அவை பொருத்தப்படுகின்றன.

By admin