ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல்; திமுகவின் குறிக்கோள்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

அரசியல்
  •  
  •  
  •  
  •  

ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் ஆகியவைதான் திமுகவின் குறிக்கோள் என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது, நேற்று (ஆக. 18) பேரவையில் எதிரொலித்தது.