தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தொகுதியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி போட்டியிட வேண்டும் என முதல் நாளில் விருப்பமனு அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் இறுதி கட்டப் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனு விநியோகம் பணியை தொடங்கி முடித்துவிட்டன. இந்தநிலையில்தான் தி.மு.க.வில் எப்போது விருப்பமனு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இன்று (பிப்ரவரி 20ம் தேதி) திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது. இன்று முதல் மார்ச் 2ம் தேதிவரை விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விருப்ப மனுவை ரூ.1000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். முதல் நாளான இன்று ஏராளமானோர் ரூ.1000 செலுத்தி ஏராளமானோர் விருப்பமனுவைப் பெற்றனர்.

டெல்லி அரசியலைத்தாண்டி, மாநில அரசியலில் கனிமொழி கருணாநிதி தீவிர கவனம் செலுத்தவேண்டும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞரும், திமுக பிரமுகருமான தங்க கோபிநாத், திருச்செந்தூரில் கனிமொழி போட்டியிட வேண்டும் என முதல் நாளில் விருப்பமனுவை அளித்தார்.
இந்தத் தகவல்தான், திருச்செந்தூர் தொகுதி உடன் பிறப்புக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
