மீண்டும் ஊரடங்கு…?

முதல்வர் இன்று ஆலோசனை
கொரோனா தாக்கத்தின் முதல் இரண்டு அலைகளை விட மூன்றாவது அலையின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று பொதுமக்கள் அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், தமிழக அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரனமாக கொரோனா தாக்கமும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin