தொடையில் குத்திய மரக்குச்சி!

Uncategorized
  •  
  •  
  •  
  •  

அரியலூர் சிறுவனை காப்பாற்றிய தஞ்சை மருத்துவர்கள்.

அரியலூர் மாவட்டம் வானதிரையன் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் ராஜா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்தநிலையில் சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்த போது கீழே இருந்த 3 அடி நீளம் கொண்ட குச்சி தொடையில் குத்தியுள்ளது. இதையடுத்து சிறுவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகள் சென்ற பிறகு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிறுவன் தொடையில் இருந்த குச்சியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.